முன்பகை காரணமாக நண்பனை கொன்ற குற்றவாளி கைது

மைசூர்: செப்டம்பர் . 2 – பகையாளி மீதிருந்த பகையால் அவனை சிறைக்கு அனுப்ப சதி திட்டம் தீட்டி நண்பனையே கொலை செய்த குற்றவாளி ஒருவனை அந்தரசந்தே போலீசார் கைது செய்துள்ளனர். ஹெச் டி கோட்டே தாலூகாவின் நேரலஹண்டி என்ற கிராமத்தில் நடந்த இதே கிராமத்தை சேர்ந்த பானுபிரகாஷ் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் திருமணமான பெண் ஒருவருக்கு மெசேஜ் மற்றும் போன் செய்து வந்த நிலையில் இந்த இளைஞன் மீது அந்த பெண்ணின் குடும்பத்தார் சண்டைபோட்டதுடன் பின்னர் சமாதான பேச்சுவார்த்த்தை நடத்தி விவகாரம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் இளைஞனின் உடல் கால்வாய் அருகில் கண்டெடுக்கப்பட்டிருப்பதுடன் பெண்ணின் குடும்பத்தார் இவனை கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து கலாட்டா செய்த 6 பேரை போலீசார் வசத்தில் எடுத்து விசாரித்தனர். விசாரணையின் போது இந்த விவகாரம் புதிய திருப்பம் பெற்று கொலைசெய்தவன் பானுபிரகாஷின் நண்பனான தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. தினேஷுக்கும் இல்லத்தரசியின் கணவன் ஏன் பிரகாஷ் என்பவன் மீது பழைய பகை இருந்துள்ளது. இதனால் தினேஷ் தானே பானுபிரகாஷை கொலை செய்துவிட்டு பிரகாஷ் indha கொலை விவகாரமாக சிறைக்கு செல்வான் என கற்பனை செய்துள்ளான். இந்த நிரையில் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக்கொள்ள தினேஷ் மற்றும் அவனுடைய நண்பன் பீமாவுடன் சேர்ந்து பானுபிரகாசை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு கிராமத்தின் புறப்பகுதியில் கபினி நதியில் வீசி எரிந்துள்ளனர். கொலையுண்ட இடத்தின் மொபைல் டவர் வாயிலாக கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி தினேஷ் மற்றும் பிரகாஷுக்கு இடையே இருந்த பகையில் ஒன்றும் தெரியாத அப்பாவி பானுபிரகாஷு கொலை செய்யப்பட்டுள்ளான் .