முன்மாதிரியாக‌ திகழும் மடிவாளா மார்க்கெட்

பெங்களூரு, செப். 8: பெங்களூரின் மடிவாளா மார்கெட் அனைத்து மார்கெட்டுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.
இந்த மார்கெட்டில் உள்ள அனைத்து விற்பனையாளர்களும் பார்வையாளர்களும் கழிவுகளை அகற்றுதல், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய மடிவாளா மார்கெட்டில் கட்டளை மையம் அமைக்கப்பட உள்ளது
மாடல் மார்க்கெட்டாக மடிவாளா மார்க்கெட்டில், விரைவில் கட்டளை மையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைத்து விதிகளையும் கடைபிடிக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்த மார்ஷல்களால் கண்காணிக்கப்படுவார்கள்.
மார்கெட், பெங்களூரு மாநகராட்சி மார்க்கெட் அசோசியேஷன் மற்றும் தினசரி விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தும் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.
வேடன் குழுமம், கோரமங்களா குடியிருப்போர் நலன்புரி சங்க‌ உறுப்பினர்களுடன் இணைந்து கழிவு மேலாண்மை பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். வேடனின் சுஹாசினி ஹத்வார் கருத்துப்படி, மார்க்கெட்டில் நியமிக்கப்பட்டு மூன்று ஷிப்டுகளில் பணிபுரியும் மார்ஷல்களும் கட்டளை மையத்தில் அமர்ந்து மார்கெட்டை முழுமையாக‌ பார்வையை இட‌லாம்.
கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாதவர்கள், காய்கறிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொட்டுவதை அடையாளம் கண்டு, மார்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் அதை பார்த்து அறிவிப்பு செய்யலாம். அதன் பிறகு விற்பனையாளர்கள் அல்லது பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
இது தவிர, மார்கெட்டில் மின் வண்டிகள் வைத்திருப்பதன் அவசியத்தையும் தன்னார்வலர்கள் சுட்டிக்காட்டினர். “தற்போதைய மார்கெட்டில் குப்பை சேகரிப்பு முறையில், கடைவீதியாக சென்று, வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக குப்பைகளை சேகரிக்கும் பணியில், துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களிடம் உள்ள தள்ளுவண்டிகளில், ஏராளமான கழிவுப் பொருட்களை கொண்டு செல்ல‌ சிரமம் ஏற்படுகிறது.
அவர்கள் மின் வண்டியை பயன்படுத்தினால் கழிவுப் பொருட்களை கொண்டு செல்ல உதவியாக இருக்கும். தற்போது, ​​துப்புரவு பணியாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு எட்டு தள்ளுவண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு மின் வண்டிகள் கிடைத்தால், அது சந்தையின் நான்கு தொகுதிகளையும் எளிதாகக் கடக்க உதவும் என்றார்.
கோரமங்களா குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ பலராம், சந்தையில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு மின் வண்டி ஒன்றை வழங்கியுள்ளார். முதல்கட்டமாக இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெங்களுரு மாநகராட்சி தெற்கு மண்டல ஆணையர் ஜெயராம் ராய்புரா, மார்கெட்டிற்கு அடுத்த இடத்தில் கட்டளை மையம் அமைத்து வேலை செய்ய முடியும் அதை விரைவில் தொடங்க உள்ளோம் என்றார்.