மும்பையில் திடீர் மழை

மும்பை, மார்ச் , 17 – மும்பையில் கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களாக வெயில் குறைந்து உள்ளது. நேற்று பெரும்பாலான இடங்கள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான காற்றும் வீசியது. இதேபோல ஒரு சில இடங்களில லேசான சாரல் மழை பெய்தது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்தது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய மராட்டிய பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து உள்ளது. ராய்காட் மாவட்டத்திலும் லேசான மழை பெய்தது” என்றார். மும்பை நகரம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக நேற்று மாநகராட்சி தெரிவித்து இருந்தது. கடந்த வாரம் பருவம் தவறி பெய்த மழையால் மராட்டியத்தில் விவசாய பயிர்கள் நாசமானது குறிப்பிடத்தக்கது.