மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர்

மும்பை, மார்ச் 2- முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் தேதி முதல் 26ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ஆட்டங்களில் (150 போட்டி) ஆடியவர் என்ற பெருமைக்குரியவர்.