முரட்டு யானை திடீர் பலிசாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

பெங்களூர் : நவம்பர் . 1 – அரிசிமன்னன் என்றே புகழ் பெற்றிருந்த விநாயகன் என்ற வன துறைக்கு சொந்தமான யானை பண்டீபுரத்தில் தடுக்கி விழுந்து இறந்திருப்பது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பண்டீபுரா பகுதியில் ராம்பூரா யானைகள் காப்பகத்தில் பண்டீபுரா புலிகள் காப்பக பகுதியில் நேற்று அரிசிமன்னன் என்றே புகழ் பெற்றிருந்த 36 வயதான ஆண் யானை விநாயகன் திடீரெனெ சுருண்டு விழுந்துள்ளது . உடனே சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் மற்ற வனத்துறை ஊழியர்கள் யானைக்கு அவசர முதலுதவிகள் செய்து யானையை எழுப்ப முயற்சித்தும் எந்த பயமுமின்றி விநாயகன் அங்கேயே இறந்துளான் . இந்த யானையின் சாவுக்கான உண்மையான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வன துறை அதிகாரி ரமேஷ் குமார் தெரிவித்தார். இந்த யானை கடந்த சில நாட்களாகவே பண்டிபூர் புலிகள் காப்பக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து குந்துகெரே கிராமத்தின் சுற்றுப்பகுதியில் மற்றும் எலசிட்டி ஆகிய பகுதிகளில் திரிந்து வந்துள்ளது. தவிர இப்பகுதிகளில் சில வீடுகளை தாக்கியும் உள்ளது. இந்த முரட்டு யானையை சிறைபிடிக்குமாறு இப்பகுதி மக்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை வற்புறுத்தியும் உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட வன அதிகாரிகள் யானையை சிறைபிடித்து ராம்பூரா யானைகள் காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர் . அங்கு இந்த யானைக்கு கர்ணன் என்ற பெயர் சூடப்பட்டிருந்தது. அடுத்த தசரா பண்டிகை ஊர்வலத்தில் இந்தயானையை அம்பாரி சுமக்கும் பணியில் ஈடு படுத்ததும் வகையில் பயிற்சிகள் அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முயன்று வந்தனர். இந்த யானை கடந்த 2021ல் கோயமுத்தூரில் சிறைபிடிக்கப்பட்டது . பின்னர் தமிழ் நாட்டு முதுமைலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்தது. அனால் இந்த யானை பண்டிபுர எல்செட்டி ஆகாரத்தை தேடி வந்து வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதனால் இந்த யானையை மீண்டும் கர்நாடக வன துறையினர் ஜூன் 2023ல் தங்கள் வசம் எடுத்து ராம்பூரா முகாமில் தங்க வைத்து பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவந்தன.