Home Front Page News முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு

முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு

மதுரை: ஜூலை 3 –
திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின் பலனை தங்களுக்கானதாக அறுவடை செய்து கொண்டது பாஜக.
மாநாட்டை நடத்துவதற்கு காவல் துறை தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் நீதிமன்றம் வரைக்கும் சென்று தளர்த்தி மாநாட்டை நடத்தி முடித்தார்கள். இந்த நிலையில், முருகபக்தர்கள் மாநாடு கூட்டப்பட்ட அதே அம்மா திடலில் 6-ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக அரசியல் பிரிவு) மாநில மாநாட்டை நடத்துவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்து முன்னணி மாநாட்டுக்குப் போட்டியாக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என ஒரு தரப்பினரும், முஸ்லிம்களின் பலத்தைக் காட்டி அதற்கேற்ப கூட்டணியில் சீட் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த மாநாடு என ஒரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாநாடு குறித்து நம்​மிடம் பேசிய மனிதநேய மக்​கள் கட்​சி​யின் மாநில தலை​வர் ஜவாஹிருல்​லா, மே 31-ம் தேதியே மதுரை​யில் இந்த மாநாட்டை நடத்த திட்​ட​மிட்​டோம். திமுக பொதுக்​குழு, அதன் பிறகு முரு​கபக்​தர்​கள் மாநாடு என அடுத்​தடுத்து வந்​த​தால் எங்​களது மாநாடு தள்​ளி​போனது. நாங்​கள் யாருக்​கும் போட்​டி​யாக மாநாடு நடத்​த​வில்​லை. நாட்டின் சட்​டம் இயற்​றும் அவை​களில் முஸ்​லிம்​களுக்​கான உரிய பிர​தி​நி​தித்​து​வம் தேவை என வலி​யுறுத்​து​வதே மாநாட்​டின் நோக்​கம்.
எங்​களுக்​கு, நாடாளு​மன்​றம், சட்​டமன்​றத்​தில் உரிய பிரநி​தித்​து​வம் இல்லை என, உணரு​கி​றோம். இந்​தச் சூழலில் தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் மேற்​கொண்​டுள்ள பிஹார் மாநிலத்​தில் அது தொடர்​பாக பல்​வேறு கேள்வி​கள் கேட்​கப்​பட்​டுள்​ளன. தேசிய குடி​யுரிமை பட்​டியலிலுள்ள தகவல்​களை பட்​டியலில் சேர்க்க வேண்​டும் என்ற நிலை உள்​ளது. எல்​லோரும் எல்லா ஆவணங்​களை​யும் வைத்​திருக்க முடி​யாது. இது போன்ற சூழலில் சிறு​பான்​மை, ஒடுக்​கப்​பட்ட, பட்​டியலினத்​தவர்​களின் வாக்​கு​கள், மற்​றும் அங்கே ஆளும் தரப்​புக்கு ஆதர​வாக வாக்​களிக்​காதோரின் வாக்​குரிமை பறிக்​கப்​படுமோ என அஞ்​சுகி​றோம். இதையெல்​லாம் மனதில் வைத்தே இம் மாநாட்டை நடத்​துகி​றோம். தேர்​தல் சமயத்​தில் கூடு​தல் சீட்​களை பெறு​வதற்​காக இந்த மாநாடு நடத்​தப்​படு​கிறதா என்று கேட்​டால், நாங்​கள் கூடு​தல் சீட் கேட்​போம். அதில் மாற்​றுக் கருத்து கிடை​யாது. பாராளு​மன்​றத்​தில் உள்ள 543 உறுப்​பினர்​களில் 80 இஸ்​லாமியர்​கள் இருக்​கவேண்​டும். ஆனால், 24 பேர் மட்​டும் உள்​ளனர். ராஜ்ய சபா​வில் 35 உறுப்​பினர்​கள் இருக்க வேண்​டிய இடத்​தில் 13 பேர் மட்​டுமே உள்​ளனர். தமி​ழ​கத்​தில் 14 இஸ்​லாமிய எம்​எல்​ஏ-க்​கள் இருக்க வேண்​டிய இடத்​தில் 7 பேர் மட்​டுமே இருக்​கி​றோம். இந்​தியா முழுக்க 4,123 எம்​எல்​ஏ-க்​கள் இருக்​கி​றார்​கள். இதில் 296 பேர் மட்​டுமே இஸ்​லாமிய எம்​எல்​ஏ-க்​கள். உள்​ளாட்​சிகளி​லும் எங்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் இல்​லை. தமி​ழ​கத்​தில் 7 சதவீதம் இஸ்​லாமியர்​கள் இருக்​கி​றோம். ஆனால், அதற்​கேற்ப எங்​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் இல்​லை. இதையெல்​லாம் பேசுவதற்​காகத்​தான் மாநாட்​டைக் கூட்​டு​கி​றோம். இந்த மாநாட்​டில் 2 லட்​சம் பேர் கூடு​வார்​கள் என எதிர்​பார்க்​கி​றோம்” என்​றார். ஆளும் கட்சி தொடங்கி அனைத்​துக் கட்​சிகளும் மதுரையை மையப்​படுத்​தியே மாநாடு உள்​ளிட்ட தங்​களது நிகழ்ச்​சிகளை நடத்தி பலம் காட்டி வரு​வ​தால் தூங்கா நகரம் துறு​துறுப்​பாய் இயங்​கிக் கொண்​டிருக்​கிறது

Exit mobile version