முல்லைப் பெரியாறு அணை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு

புதுடெல்லி, நவ.16- முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய புதிதாக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில் அணையை பராமரிக்க அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.