முளைக்கட்டிய பயறுகளில் நன்மைகள்


முளைக்க வைத்த பயறுகளின் நன்மைகள்: நல்ல ஆரோக்கியத்திற்காக நாம் அனைத்து முக்கிய ஆகாரங்களையும் உண்ண வேண்டும். பச்சை இலைகளின் காய்வகைகள் , பழங்கள் ,பயிருகள் கொட்டைகள் , மற்றும் சிறுதானியங்கள் மற்றும் முளை விட்ட பயறுகள் மற்றும் கொட்டைகள் போதுமான அளவிற்கும் மேலாக போஷாக்கு அம்சங்கள் நிறைந்தவை. தவிர உடலுக்கு தேவையான அனைத்து போஷாக்கு குணாம்சங்களும் இவற்றில் உள்ளன. இவற்றை பச்சையாகவே உண்பதால் முழு சக்தி உடலுக்கு கிடைக்கிறது.
ஜீரண கிரியைக்கு உதவும்: சிறு தானியங்கள் விதைகள் மற்றும் காய்கறிகள் முளை விடுவதால் இவற்றின் தோல்களில் உள்ள பைட்ரிக் போன்ற தேவையற்ற ரசங்களை அழித்து விடுகின்றன. தவிர விதைகள் ஜீரண சக்தியை கூட்டும் அணுக்களையும் ஈர்த்துக்கொள்கின்றன. இதனால் நம் உடலின் சாமான்ய கிரியைகள் சீராகின்றன. நாம் உணவு உட்கொள்ளும்போது அதை ஜீரணிக்க தேவையான அமிலங்கள் சுரக்கவும் உதவுகின்றன. சிறு தானியங்கள் முளை விடுவதால் இவற்றில் நார் சக்தியும் அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்ற வல்லது. மற்றும் வயிற்றை சுத்தமாக்குகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் கூடுகிறது. முளை விட்ட பயறுகளில் இரும்பு , தாது , மாங்கனீஸ் , மற்றும் பொட்டாசியம் சக்திகள் அதிகம் உள்ளன. இவை உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை பெருக்கும் . தவிர ஆரோக்கியமுள்ள நல்ல ரத்தத்தை உடல் முழுக்க பரவ செய்கின்றன. இவை உடல் நோய்கள் மற்றும் தொற்று உண்டாவதையும் தவிர்க்கின்றன. சில முளை விட்ட பயறுகளில் ஒமேகா – 3 கொழுப்புஅம்சங்கள் இருப்பதால் இது நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை தரும் கெட்ட கொலஸ்ட்ரால்களை கட்டு படுத்துகின்றன. முளை விட்ட பயறுகளை அடிக்கடி உண்பதால் நம் இருதய சம்மந்தப்பட்ட வியாதிகள் தவிர்க்கப்படுகின்றன. முளை விட்ட பயறுகள் நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. முளை விட்ட பயறுகள் கேன்சர்களுக்கெதிரான குணங்களையும் கொண்டுள்ளன. தவிர இருதயம் மற்றும் நம் குடல்களின் நன்மைக்கு தேவையான அனைத்து சக்திகளையும் அளிக்க வல்லவை அந்த வகையில் முளை விட்ட பயறுகள் பலவித கான்செர்களுக்கும் நல்ல மருந்தாகும்.