முஸ்லீம் லீக் பிரமுகர் வீட்டில் சைத்ரா குந்தாபுரா தஞ்சம்

பெங்களூர் : செப்டம்பர். 13 – தொடர்ந்து முஸ்லீம் இனம் குறித்து மிகவும் தாக்கி பேசிவந்த பி ஜே பி தீப்பொறி பேச்சாளர் சைத்ரா குந்தாபுரா தற்போது தஞ்சம் அடைந்திருந்தது முஸ்லீம் நண்பரின் வீட்டில் என்பது சி சி பி போலீஸ் விசாரணையில் தற்போது வெளியாகியுள்ளது. சி சி பி போலீசார் தன்னை தேடி வருவது குறித்து தகவல் அறிந்த பின்னர் விழிப்படைந்த சைத்ரா குந்தாபுரா முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அஞ்சும் என்ற பெண்ணின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். குற்றவாளியை கைது செய்து நகருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ள சி சி பி போலீசார் காங்கிரஸ் குறித்து குற்றம் சாட்டிவரும் சைத்ரா நான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் என் மீது தேவையில்லாமல் வழக்கு பதிவாகியுள்ளது, காங்கிரஸ் கட்சி இந்து இயக்கத்தினரை குறியாய் வைத்து கொண்டு தொல்லைகள் கொடுத்துவரும் நிலையில் அதன் விளைவாகவே ஏன் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது. நான் எவ்வித மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார் . அவரிடம் சி சி பி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.