மூச்சுத்திணறல் காரணமாக 5 குழந்தைகள் பரிதாப பலி

கொல்கத்தா, மார்ச் 1
மேற்கு வங்காள மாநிலத்தில் சமீப சில நாட்களாக ‘அடினோவைரஸ்’ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இரு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவந்த 5 குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளன. 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு காரணம் அடினோவைரசா என்று டாக்டர்களால் உறுதியாக கூறமுடியவில்லை. ‘அந்த 5 குழந்தைகளும் ‘நிமோனியா’ எனப்படும் நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளன. அந்த குழந்தைகளில் ஒரு 9 மாத குழந்தையும் அடக்கம். அக்குழந்தையின் சோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த அறிக்கை வரும்போதுதான், அக்குழந்தை அடினோவைரசால் இறந்ததா என தெரியவரும்’ என்று அரசு சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.