மூச்சு திணறும் கர்நாடகம்


பெங்களூர் மே 4
கர்நாடக மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதி இல்லாத காரணத்தால் ஏராளமான கோரோனா . நோயாளிகள் தினசரி பலியாகி வருகின்றனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று 24 கோரோனா நோயாளிகள் பலியானார்கள். இந்த துயரத்திலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் இன்று மாநிலத்தில் 6 பேர் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகி உள்ள பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் எலகங்கா புறநகரில் உள்ள ஆர்கா தனியார் மருத்துவமனையில் இரண்டு பேர் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகி உள்ளனர். இதேபோல் குல்பர்கா அப்சல்பூர் தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் பலியாகி உள்ளனர். பெலகாவியில் 3 பேர் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகி உள்ளனர். கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் உள்ளது இதனால் மன நோயாளிகள் உயிர் பிழைக்க போராடி வருகின்றனர் தினசரி நூற்றுக்கணக்கான பேர் பலியாகி வருகின்றனர் இவர்களில் கொரோனாவுக்கு இறப்பவர்களை விட உரிய மருத்துவ சிகிச்சை இல்லாமல் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்