மூதாட்டியிடம் ரூ.2.5 கோடி மோசடி : ஒருவன் கைது

பெங்களூர்: ஆக. 5 – அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து இந்தியாவில் தங்க முற்பட்ட மூதாட்டியிடம் தடாலடியாக 2.5 கோடி ரூபாய்கள் மோசடி செய்த அபார்ட்மெண்ட் ஊழியன் ஒருவனை ஹுலிமாவு போலீசார் கைது செய்துள்ளனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்த கன்னையா குமார் யாதவ் (35 ) என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஆவான். மணி திருமலை (75) என்பவர் மோசடிக்கு ஆளான மூதாட்டி ஆவார். கடந்த 1973ல் கணவனுடன் அமெரிக்காவிற்கு சென்று அங்கு தங்கியிருந்த மணி திருமலை கணவனின் மரணத்திற்கு பின்னர் கொரோனா சமயத்தில் இந்தியாவிற்கு வந்தார். அப்போது ஹுலிமாவுவில் உள்ள சார்வபௌமா நகரில் ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வந்த மணி திருமலைக்கு குற்றவாளி அறிமுகமாகி உள்ளான். முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மணி திருமலைக்கு உதவி செய்துவந்து அவருடைய நம்பிக்கையை பெற்று குற்றவாளி மூதாட்டியின் மகனை போல் உறவு வளர்த்துக்கொண்டுள்ளான். மணி திருமலையும் குற்றவாளியை முழூதுமாக நம்பி உள்ளார். இதே வேளையில் பெங்களூரில் வீடு வாங்க வென வீடுகளை தேடி கொண்டிருந்த மணி திருமலை குற்றவாளி கன்னையாவிடம் கடந்த ஏப்ரல் மாதம் பி டி எம் லே அவுட் நான்காவது ஸ்டேஜில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றை காட்டியுள்ளார்