மூதாட்டியை மிதித்து கொன்ற யானை


குடகு, ஏப். 7- குடகு மாவட்டத்தில் யானைகளால் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. யானை ஒன்று லட்சுமி என்ற 80 வயது மூதாட்டியை தாக்கி கொன்றது.
இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டம், வி.ராஜ்பேட் தாலுகா தோபனகள்ளி கிராமத்திற்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இதனால் கிராம வயல்களில் உள்ள பயிர்கள் தொடர்ந்து நாசமாகி வருகிறது.
இந்நிலையில் அதிகாலையில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை காக மறைவான இடத்திற்கு சென்று உள்ளார்.
அங்கு நடமாடிய யானை ஒன்று மூதாட்டியை தாக்கி உள்ளது. இதில் அப்பெண்
படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடகு மாவட்டத்தில் யானைகள் அட்டகாசம் அதிகமாக இருந்தும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தவறுகின்றனர் என்று வலியுறுத்தி, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.