மூத்த புகைப்பட கலைஞர் பாபுராஜ் காலமானார்

பெங்களூர், ஜூலை 25-
தினச்சுடர் சஞ்சய் வாணி நாளிதழ்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த புகைப்பட கலைஞர்
பாபுராஜ்(82) நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு காலமானார்.
ஹெப்பால், கெம்பாபுராவில் வசித்து வந்த இவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் காலமானார். கர்நாடகாவின் மூத்த புகைப்பட கலைஞரான இவர் பல விருதுகள் பெற்றவர். இவரின் புகைப்படங்களை பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 3:30 மணிக்கு ஹெப்பால் மின் மயானத்தில் நடக்கிறது.இவரது மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு மனைவி திலகவதி, மகள் தீபலட்சுமி, மகன் சபரீஷ் ஆகியோர் உள்ளனர்.