மூன்று சிறுத்தை குட்டிகள் மீட்பு

மைசூர், ஜூலை 18-
மைசூர் மாவட்டம், ஹுன்சூர் அருகே உள்ள ஹனக்கோடு கிராமத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள் இருந்ததை வனத்துறையினர் மீட்டனர்.மைசூரின் ஹூன்சூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர் சிறுத்தைகளை பிடிக்க பலமுறை வனத்துறைக்கு கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.
ஆயினும் இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுத்த பாடில்லை. நேற்று ஹுன் சூர் அருகே உள்ள ஹனக்கோடு கிராமத்தில் சந்தோஷ் குமார் (45) என்பவரின் தோட்டத்தில் இருக்கும் பம்பு ஹவுஸில் பம்பு ஸ்டார்ட் செய்ய அவர் சென்றுள்ளார். அப்போது பம்ப் செட் அருகே மூன்று சிறுத்தை குட்டிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு கிராமத்தினரிடம் தெரிவித்துள்ளார். அங்கு பலரும் எச்சரிக்கையுடன் அங்கு வந்துள்ளனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் வந்து சிறுத்தை குட்டிகளை மீட்டு கொண்டு சென்றனர்.அப்பகுதியில் தாய் சிறுத்தை தனது குட்டிகளை தேடி அலையும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. தாய் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.