
சென்னை: நவம்பர் 17
கேரளாவில் அசுத்தமான நீர் நிலைகளில் குளித்தவர்களுக்கு மூளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கேரளாவில் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளில் குளித்தவர்களுக்கு மூளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
மூளையை தின்னும் அமீபா இந்த மூளை அழற்சிக்கு காரணம் ‘நெக்லேரியா ஃபோலேரி’ எனும் தனி செல் கொண்ட அமீபாதான். வழக்கமாக இந்த அமீபா உள்ள நீரை மனிதர்கள் குடிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் இது நேரடியாக குடல் வழியாக இரைப்பைக்குள் செல்கிறது.
இப்படி உள்ளே வரும் அமீபாவை, வயிற்றுக்குள் இருக்கும் நொதிக்கும் அமிலங்கள் தாக்கி அழித்துவிடும்.
பின்னர் மலம் வழியாக இந்த அமீபா வெளியேற்றப்பட்டுவிடும். பிரச்சனை மூக்கு வழியாக செல்வதால்தான் ஏற்படுகிறது. மூக்கு வழியாக பயணிக்கும் அமீபா மூக்கு வழியாக பயணிக்கும் இந்த அமீபா, மோப்ப நரம்பு வழியாக சென்று மூளையை அடைகிறது. அங்கு தங்கி, மூளையை தாக்கி அதை முடக்கி மூளை அழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த அமீபா மூளையை தாக்கியவுடன் அதன் அறிகுறிகள் தெளிவாக தெரியும். குறிப்பாக கடுமையான தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். கழுத்து இறுக்கம், குழப்பம்,
கவனம் செலுத்துவதில் சிரமம், வலிப்பு ஏற்பட்டு இறுதியாக பாதிக்கப்பட்ட நபர் கோமா நிலைக்கு சென்று விடுவார் கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ், தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுவதால், அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
















