மெக்சிகோ ஜனாதிபதிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று

மெக்சிகோ சிட்டி, ஜன. 11- வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோருக்கு கொரோனா தொற்றானது இரண்டாவது முறையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறும்போது, “எனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் லேசாக இருந்தாலும், நான் தனிமையிலேயே உள்ளேன். எனது உடல்நிலை சரியாகும் வரை ஆன்லைன் வழியாக பணியினை மேற்கொள்வேன். உள்துறை செயலாளர் அடன் அகஸ்டோ லோபஸ் ஹெர்னாண்டஸ் என்னுடைய பிற பணிகளை மேற்கொள்வார்” இவ்வாறு அவர் கூறினார். இவர் ஏற்கெனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.