மெட்ரோ ஊதா பாதையில் போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் பரிதவிப்பு

பெங்களூரு, பிப். 20:
பெங்களூரில் இன்று காலை பீக் ஹவர் நேரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.பையப்பனஹள்ளி – கருடாச்சார் பாளையம் இடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ சேவையில் மாற்றம் ஏற்பட்டதால் மெட்ரோ ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை ஊழியர்கள் தீர்க்க முயற்சி கொண்டனர். பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும் என்று இது குறித்து மெட்ரோ கார்ப்பரேஷன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷன் மெஜஸ்டிக், பயணத்தை தொடர முடியாமல், வெளியே வரமுடியாமல் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ரயில்கள் வருகின்றன. காலை 8 மணிக்கு வந்தவர்கள் 9.30 மணிக்கும் ஸ்டேஷனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.ஊதா நிற பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு, பசுமை வழித்தடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சேவைகளிலும் நிறைய மாறுபாடுகள் உள்ளன. மெட்ரோ சேவையை நம்பியிருந்தவர்கள் இன்று ரிக்ஷா அல்லது பேருந்தைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டியவர்களும் தாமதம் ஆனதால் மெஜஸ்டிக்கில் இறங்கி வேறு போக்குவரத்துக்கு புறப்பட்டனர். இதனால் மெஜஸ்டிக் ஸ்டேஷனுக்கு வெளியேயும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.