மெட்ரோ போக்குவரத்தில் பாதிப்பு

பெங்களூரு, செப்.20-
நம்ம மெட்ரோ நாளை ஊதா லைன் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பயணிகள் மாற்றத்தை கவனித்துக் கொள்வது நல்லது.பையப்பன ஹள்ளி
மெட்ரோ ரயில், கே.ஆர்., புரம், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கிடையே புதியதாக கட்டப்பட்டுள்ள பாதையில் பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்கள் நடைபெறுகிறது. கிருஷ்ணராஜபுரம் – கருடா சார்பாளையா இடையே, நாளை மெட்ரோ ரயில் இருக்காது என பி. எம். ஆர். சி. எல்., தெரிவித்துள்ளது.
பையப்பன ஹள்ளியில் இருந்து இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை மதியம் 1.30 மணி முதல் மாலை 4:30 மணி வரையில் ரயில் சேவை இருக்காது.ஒயிட் பீல்டு (காடுகோடி) மற்றும் கருடா சார்பாளையா இடையே ஒரு நாள் முழுவதும் மெட்ரோ சேவை இருக்கும்.
இந்திரா நகர் – கெங்கேரி வரை மதியம் 1.30 மணி முதல் 4.30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்கும். பையப்பனஹள்ளி – கெங்கேரி இடையே வழக்கம் போல் இரவு 11 மணி வரை சேவை இருக்கும். பச்சை வண்ண லைன் எந்த மாற்றமும் இருக்காது