மெட்ரோ ரயிலில் பயணிகளுக்குஅவசர உதவி வசதி

பெங்களூர் : டிசம்பர் . 9 – எவ்வித அவசரநிலையிலும் பயணிகளுக்கு உதவியாக நம்ம மெட்ரோ தாயாராய் உள்ளதாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பெ எம் ஆர் சி எல் நிர்வாகம் கூறுகையில் எந்த நேரத்திலும் தங்கள் பாதுகாப்பு ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதுடன் அவசர நிலைமைகளில் எந்த உதவிக்கும் தாயாராய் இருப்பார்கள்.
பயணிகள் தங்கள் அவசர நேரங்களில் கட்டுப்பாடு மையத்தின் தொலை பேசி எண்களான 080 – 2519 1208 மற்றும் 080 – 2216 2258 ஆகிய தொடர்பு எண்கள் மற்றும் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 12345 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசர நேரங்களில் பயணிகள் உதவிகளை பெரும் நோக்கில் மெட்ரோ ரயில்களின் அனைத்து பெட்டிகளிலும் 4 அவசர எச்சரிக்கை சங்கை பயன்படுத்தி ரயில் கட்டுப்பாடு மையத்துடன் பேச முடியும். இதன் வாயிலாக அடுத்து வரும் ரயில் நிறுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.