மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்

பெங்களூர், செப் 14-நம்ம மெட்ரோவின்ஊதா வண்ண லைன் களின்  பாதுகாப்பு குறித்து வரும் செப்டம்பர் 21 ல் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில்  நிர்வாக பாதுகாப்புத் துறை இயக்குனர் சவுத்ரி 

புதன் கிழமை நடத்த இருந்த சோதனையை ஒத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.   சோதனை எப்போது நடத்துவது என்பது குறித்து  புதியதாக தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சி.எம்.ஆர்.எஸ்., மற்றும் அதன் குழுவினர்  வேறு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு சோதனையில் புதன் அன்று நடந்த வர முடியாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிழக்கு பகுதியில் கே.ஆர்.புரம் – பையப்பன ஹள்ளி மார்க்கத்திலும்மேற்கு பகுதியில் கெங்கேரி – செலகட்டா  பகுதியில்  பயணம் செய்ய பலர் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். ஊதா லைன் உள்ள செலகட்டா முதல் காடுகோடி ஒயிட் பீல்ட் வரை 43 கி.மீ.,  இயங்கினால் மெட்ரோ நெட்வொர்க் இணைப்பு பணிகள் நிறைவடையும்.ஜுன் மாதம் முடிவடைய வேண்டிய இப்பணிகள் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப் போனது. அது தற்போது செப்டம்பர் ஆனது. மேலும் தள்ளி போகலாம். ஆனாலும், இம்மாதத்தில்யே ஊதா வண்ண இரு மார்க்கங்களும் இயங்கும் என்று சில அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.பென்னிகான ஹள்ளி,  செலகட்டா இணைப்பு  தவறியுள்ளது. மொத்த ஊதா லைன் இயங்கினால் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய முடியும்.