மெட்ரோ ரயில் நிலைய பெயர்களில் குழப்பம்

பெங்களூர், ஜன. 19-
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் என்ற பி. எம். ஆர். சி. எல் நிறுவனம் உருவாக்கியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களுக்கும் குறிப்பிட்ட இடங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் குழப்பம் இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒயிட் பீல்ட் – பையப்பன ஹள்ளி மெட்ரோ ரயில்
மார்க்கம், மார்ச் முதல் இயங்கும் என்றும், கே. ஆர். புரம்.- பையப்பனஹள்ளி மார்க்கம் ஜூன் மாதம் முதல் இயங்கும் என்றும் அறிவித்துள்ளனர். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘ஒயிட் பீல்டு’ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மாற்றாக காடுகோடி என்று பெயரை சூட்டிருக்கலாம்.ஏனென்றால், ஒயிட் பீல்டு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்திற்கு மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளது. எனவே ஒயிட்பீல்டுக்கு செல்ல மூன்று கி.மீ. தூரம் செல்ல வேண்டும். அதேபோல, காடுகோடி ஹோப் பாராம் என்பதை காடுகோடி – ‘டி பார்க்’ என்று மாற்றியிருக்கலாம்.
இது எப்படி இருக்கிறதென்றால்
இந்திரா நகருக்கு பையப்பனஹள்ளி பெயரை சூட்டுவது போல் உள்ளது.
கோடி பீசன ஹள்ளிக்கும் மார்த்த ஹள்ளிக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. காடு பீசன ஹள்ளிக்கும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் தொடர்பு இல்லை. இதன் பெயரையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. என்று அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
கெங்கேரி பஸ் நிலையத்திற்கும் ஸ்டேஷனுக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. இதனை கெங்கேரி முதல் சேட்டிலைட் டவுன் என்று மாற்றியிருக்கலாம் என்று பி.எம் .ஆர். சி .எல். நிறுவனத்திற்கு பலர் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.