மெட்ரோ ரயில் பணி மெத்தனம் எம்பி அதிருப்தி

பெங்களூர், பிப்.13-
பெங்களூர் தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா,
ஆர்.வி. சாலை மற்றும் பொம்மசந்திரா மஞ்சள் லைன் இடையேயான மெட்ரோ திட்டம் மெத்தனமாக நடந்து வரும் பணிகள் குறித்து ஏமாற்றம் அளித்துள்ளதாக, தெரிவித்துள்ளார். பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் உயர் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பின்போது, திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று எம்.பி. தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தினார். மஞ்சள் லைன் மெட்ரோ ரயில் பணிகள், தாமதம் குறித்து, பாதையின் ஆரம்ப செயல்பாடுகான தெளிவற்ற பாதையில், பொதுமக்களின் விரக்தியை நான் தெரிவித்தேன்.
ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட ஒரு கால கெடுவுக்குள், தனது இலக்குகளை அடைய முயல்கிறது.
இருப்பினும் பி.எம்.ஆர். சி.எல். தனது வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. இதன் விளைவாக, பொதுமக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் பக்க ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பி.எம்.ஆர்.சி.எல்., நிர்வாக இயக்குனர் மகேஸ்வர் ராவை சந்தித்த பிறகு, பெங்களூர் தெற்கு பகுதி எம் .பி. யான் தேஜஸ்வி சூர்யா, மஞ்சள் லைன் எப்போது செயல்படும் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
பி.எம்.ஆர்.சி.எல். சாலை வரைபடத்தை உருவாக்கி, அதை வெளியிடும் என்று நிர்வாக இயக்குனர் உறுதி அளித்தார். இதன் பணியை கண்காணிக்கவும், மேலும் தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பேற்கவும் அனுமதிக்கும் என்றார்.
சீனாவில் தயாரித்த மெட்ரோ ரயில் பெட்டிகளை பெங்களூரில் விரைவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். மஞ்சள் லைன் கூடுதலாக மெட்ரோ கட்டம் 3ன் முன்னேற்றம் குறித்தும் அவர் விவாதித்தார்.இது இந்திய அரசின் ஒப்புதலின் மேம்பாட்டு கட்டத்தில் உள்ளது. துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பனசங்கரி மெட்ரோ ரயில் நிலையம், மற்றும் பேருந்து முனையும் இடையே முன்பு தெரிவிக்கப்பட்ட ஸ்கைவாக் திட்டத்திற்கும் அவர் நிதி கோரி உள்ளார்.தற்போதைய சாலை சந்திப்பு முட்டுச்சந்து பாதசாரி கடக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பற்றதாகவே உள்ளது.