மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்

பெங்களூர், செப் 11-
மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கட்டண குறைவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரின் எதிர்கால போக்குவரத்து தயாராக உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பயணிகள் பயனடைய இதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு பரிசீலித்து முடிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை 2021க்கு இடையே ஆய்வாளர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றி உள்ள 436 குடும்பங்களையும் மற்றும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ள 914 ரயில் நிலையங்களின் அருகே உள்ள வீடுகளையும், அங்கு வசிப்போரின் நிலைப்பாட்டை ஆய்வு செய்தனர் .
இதன் ஆய்வுப்படி 65.7 சதவீதம் பேர் மெட்ரோவை பயன்படுத்த தவிர்த்து விட்டதாக கூறுகின்றார்கள்.
தற்போது மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்டு வரும் அருகே உள்ள வீடுகளைச் சேர்ந்தோர் 80 சதவீதம் பேர் மெட்ரோ பயன்பாட்டை ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளார்கள் .
16 வார்டுகளில் 1350 பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களில் உள்ளனர். இவர்களிடம் 5073 பேர் மெட்ரோ ரயில் பயன்பாடு குறித்து விசாரிக்கப்பட்டது.
மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பவர்களின் எண்ணிக்கை 81% ஆகும் இவர்கள் சராசரி வருமானம் 7,805 ரூபாய் என அவர்கள் கொடுத்த தகவலின் படி தெரியவந்துள்ளது.
இது மட்டும் இன்றி பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கூடுதலாக பயணச் செலவும் அதிகரிக்கிறது.
எனவே, உழைக்கும் மக்களுக்கு மக்கள் தொகையில் மலிவு விலையில் கட்டண வசதிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர்.
எச்எம்டி, பாகலகுண்டே நாகவாரா, தீபாஞ்சலி நகர், எளேச்சனஹள்ளி,
பென்னி கான் ஹள்ளி
ஆகிய ஆறு இடங்களில் மிகவும் வசதியற்றவர்கள் உள்ளனர். இவர்கள் மெட்ரோவில் பயணிக்க கட்டண குறைவை எதிர் நோக்குகிறார்கள்.
பெங்களூரில் மேலும் 10 வார்டுகளில் மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அவை பெல்லந்தூர், விஞ்ஞான நகர், காடுகோடி, சாந்தி நகர், ஞானபாரதி, சிங்காப்புரா, ஹொரமாவு ஆகிய இடங்களில் மெட்ரோ ரயிலை பலரும் எதிர்நோக்கி இருப்பவர்கள்.
ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பஸ் கட்டணமும் மெட்ரோ கட்டணமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அவர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
மெட்ரோ ரயிலில் வருமானம் ஆண்டுக்கு ரூ. 3.4 கோடியாக இருந்தது அது தற்போது ரூ.5.9 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை 6லட்சத்து 24 ஆயிரம் என தெரிய வந்துள்ளது.