மெட்ரோ வழித்தடங்களில் 7 கூடுதல் பஸ்கள் அறிமுகம்

பெங்களூர், நவ. 21-
பெருநகர் பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து கழகம் என்ற பி எம் டி சி நிறுவனம் 3 மெட்ரோ பீடர், பச்சை வழித்தடங்களில் ஏழு கூடுதல் பஸ்களை திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
எம். எஃப் .என்ற மெட்ரோ பீடர் 23 இ சிக்கபானவர், கனிகர ஹள்ளி, குனி அக்ரஹாரா, வழியாக
எம். எஸ். பாளையம் ஜால ஹள்ளி மெட்ரோ நிலையம் வரையில் மூன்று பஸ்கள் இயக்கப்படும.எம். எஃப் . 27 ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பாகலகுண்டே, ஆச்சாரியா கல்லூரி, ஆலூர் வழியாக மாகாளிக்கு செல்லும்
இந்த வழித்தடத்தில் மூன்று பஸ்கள் இயக்கப்படும்.
ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து முதல் பஸ் காலை 6:25 மணிக்கும், கடைசி பஸ் இரவு 7:50 மணிக்கும் புறப்படும்.
மாகாளியில் முதல் பஸ் காலை 7:15 மணிக்கும் கடைசி பஸ் 8: 40க்கும் புறப்படும்.
எம் .எஃப்: 25 நாகசந்திரா வழியாக திப்பேன ஹள்ளி வழியாக எட்டாவது மைல் இந்த வழித்தடத்தில் முதல் பஸ் காலை 7:00 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8:30 மணிக்கு புறப்படும். இது திப்பேன ஹள்ளியில் இருந்து முதல் பஸ் 7:20 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8:50 மணிக்கும் புறப்படும்.பிஎம்டிசி பஸ்கள் மாதவராவிலிருந்து சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டிக்கு புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தி உள்ளது.
மாதவரத்தில் காலை
6: 40 மணிக்கு முதல் பஸ் புறப்படும். இரவு 8:30 மணிக்கு கடைசி பஸ் புறப்படும்.பிற சேவைகள் விபரம்:ஏ.சி. அல்லாத பி எம் டி சி பஸ்கள் சாலை வழித்தடங்களில், புதிய பஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. 515 ஏ உல்லாள் சேட்டிலைட் டவுன் முதல் எஸ்வந்தபூர் வரை டிடிஎம்.சி., முத்தையா ஆனபால்யா, ஆந்திரா ஹள்ளி, பீன்யா இரண்டாவது ஸ்டேஜ், ஆகிய இடங்களுக்கு எட்டு பேருந்துகள் இயக்கப்படும்.
உல்லாள் சாட்டிலைட் டவுனில் இருந்து முதல் பஸ் கலை 5 :15 மணிக்கும், கடைசி பஸ் இரவு 8: 55 மணிக்கும் புறப்படும்.

அதுவே திரும்பும் திசையில் முதல் பஸ் காலை ஐந்து 5:30 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8:55 மணிக்கும் புறப்படும்.

507 ஜி. கே .ஆர். புரம் டின் பேக்டரி, கஸ்தூரி நகர், பாபு சாப், பாளையா, எண்ணூர் கிராஸ், கொத்தனூர், கண்ணூர், வழியாக பஸ்கள் செல்லும்.

கே. ஆர் .புரத்திலிருந்து முதல் பஸ் காலை 8: 40 மணிக்கும், கடைசி பஸ் மாலை 4: 45 மணிக்கும் புறப்படும் .திரும்பும் திசையில் காலை 7: 20 மணிக்கு முதல் பஸ்ஸும், கடைசி பஸ் மாலை 3: 25 மணிக்கும் புறப்படும்.

290 இ.எச். சிவாஜி நகரில் இருந்து கோகிலு அக்ரஹாரா லேஅவுட், திருமனே ஹள்ளி கிராஸ், நாகவாரா, எலகங்கா ,ஆகிய வழித்தடங்களில் இரண்டு பஸ்கள் இயக்கப்படும்.

சிவாஜி நகரிலிருந்து முதல் பஸ் காலை 8:25 மணிக்கு புறப்படும். கடைசி பஸ் இரவு 8:05 மணிக்கு புறப்படும். எலகங்கா ஐந்தாவது ஸ்டேஜில் இருந்து முதல் பஸ் காலை 6:55 மணிக்கு புறப்படும். கடைசி பஸ் மாலை 6:30 மணிக்கு புறப்படும் என்று அறிவித்துள்ளனர்.