
பெங்களூரு, நவம்பர் 18- விவாகரத்து செய்யப்பட்ட எனது மனைவி மனரீதியாக துன்புறுத்தப்பட்டால் மெட்ரோ நிலையத்தை வெடிக்கச் செய்வேன்” என்று பெங்களூர் மெட்ரோ ரயில் நிலைய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஒருவர் மின்னஞ்சல் மிரட்டல் அனுப்பியுள்ளார்.நவம்பர் 13 ஆம் தேதி இரவு 11:25 மணிக்கு மின்னஞ்சல் கணக்கிலிருந்து மின்னஞ்சல் அனுப்பிய குற்றம் சாட்டப்பட்டவர், மெட்ரோ நிலையத்தை வெடிக்கச் செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.
மெட்ரோ ரயில் நிலைய உதவி நிர்வாக பொறியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வில்சன் கார்டன் காவல் நிலையத்தில்
எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.ணி காலம் முடிந்த பிறகும் விவாகரத்து செய்யப்பட்ட எனது மனைவியை மெட்ரோ ஊழியர்கள்துன்புறுத்துகின்றனர். இது சரி அலல இந்த நிலை நீடித்தால் மெட்ரோ ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று குற்றவாளி ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார்.இது தொடர்பாகவழக்கு பதிவு செய்துள்ள வில்சன் கார்டன் போலீசார், தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணக்கின் மூலத்தை விசாரித்து வருகின்றனர்.
















