
பெங்களூர் : மார்ச் . 9 – நகரின் சர்ஜாபுரா வீதியில் உள்ள தொட்டகனெலியில் தீ விபத்து ஏற்பட்டு பெருமளவில் நிஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன . தொட்டகாணீலி வீதி அருகில் உள்ள கர்லான் மெத்தை கடையில் தற்செயலாக தீ பிடித்த நிலையில் விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் கிளம்பியுள்ளது. இது குறித்த காட்சிகள் தற்போது வைரலாகி வந்துள்ளது. தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ யணைப்பு ஊழியர்கள் பெரும் பாடு பட்டு தீயை அணைத்துள்ளனர் . இந்த தீ அக்கம்பக்கத்து கடைகளுக்கும் பரவுமா என்ற பீதியில் பொதுமக்கள் இருந்தனர். இந்த தீ விபத்தால் அந்த சாலி முழுதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. உடனே போலீஸார் விரைந்து வந்து வாகன போக்குவரத்தை சரி செய்ததுடன் இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்த காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.