மேகதாது அணைக்கு அனுமதி தர தயாரா- பிஜேபிக்கு டி.கே.சிவகுமார் சவால்

பெங்களூரு, அக்..2-
காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியான பிஜேபி வெறும் அரசியல் செய்கிறது. மாநில நலனில் அக்கறை இருந்தால் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கட்டும் என துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பிஜேபிக்கு சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது
மேகதாது வழக்கு விசாரணையின் போது, ​​கர்நாடக மாநிலம் அணையை கட்ட தடை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே பிஜேபி தலைவர்கள் அரசியலை விட்டு விலகி மாநில நலனுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கட்டும். மாநிலத்தின் நலனில் அக்கறை இருந்தால், காவேரி, மகதாயி, கிருஷ்ணா நதிநீர் பிரச்னையில் டெல்லி சென்று மத்திய அரசுடன் விவாதிக்க வேண்டும் என்றார்.
ஷிமோகா கலவரத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்ற பிஜேபியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “சட்டத்தை கையில் எடுப்பவர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன் என்று கூறினார்.
சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே அரசின் முன்னுரிமை. இந்த சம்பவத்தின் பின்னணியில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் கல்வீச்சு, தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதை அரசு அனுமதிப்பதில்லை. நமது மாநிலம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்றார்.யாரோ ஒருவர் புகார் கூறியதை அடுத்து சாமனூர் சிவசங்கரப்பா தனது கருத்தை தெரிவித்தார். அவருடன் அமர்ந்து விவாதிப்போம் என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.