மேகதாது அணை விவகாரம் டெல்லி சென்ற தமிழக குழு

கர்நாடக , ஜூன்.- 21 – கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்த விவகாரம் குறித்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிட தமிழக குழு இன்று டெல்லி செல்கிறது .அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கின்றனர்.