மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா 3 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி:ஜன.18- 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. நாகாலாந்தில் மார்ச் 12, மேகாலயாவில் மார்ச் 15, திரிபுராவில் மார்ச் 22ம் தேதி சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிகிறது. 60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சியும், மேகாலயா, நாகாலாந்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியையும் நடைபெற்று வருகிறது.
மேகாலயாவில் எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற வகையில் பிரச்சாரம் செய்து வருகிறது. நாகாலாந்தில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன; எதிர்க்கட்சியை இல்லை. அண்மையில் குஜராத், ஹிமாச்சலில் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.