மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம், ஜன.2- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,081 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,942 கன அடியாக சரிந்தது.