மேட்டூர் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர்/தருமபுரி: நவ.2- மேட்டூர் அணை நீர்மட்டம் 52.43 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்றுமுன்தினம் விநாடிக்கு 2,794 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,968 கனஅடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 52.43 அடியாகவும், நீர்இருப்பு 19.37 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 29-ம் தேதி விநாடிக்கு 4,000 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று காலை அளவீட்டின் போதும் நீர்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாகவே தொடர்ந்தது.