மேம்பாலத்தை தற்காலிகமாக மூட திட்டம்

பெங்களூர், ஜன 9-பீனியா மேம்பாலத்தை அனைத்து வாகன போக்குவரத்துக்கும் ஜனவரி 16 இரவு 11:00 மணி முதல், ஜனவரி 19 காலை 11:00 மணி வரை மூட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்ற என். எச். ஏ. ஐ., திட்டமிட்டுள்ளது மேம்பாலத்தை பலப்படுத்துவதற்கு சேர்க்கப்பட்ட 240 அழுத்தப்பட்ட கேபிள்களின் சுமைகள் சோதனை முடிவுகளின் அடிப்படையில், வரும் வாரங்களில் மேம்பாலங்கள் அனைத்து போக்குவரத்துக்கும் திறக்கப்படும் என்று என்.எச்.ஏ.ஐ., திட்ட இயக்குனர் கே .பி. ஜெய குமார் தெரிவித்தார்.15 மீட்டர் அகலம், 4 .2 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலம் பீனியாவில் தொடங்கி, தும்கூர் சாலை நாகசந்திராவில் முடிவடைகிறது. டிசம்பர் 22ல் அதன் 3 இடைவெளிகளில் இரண்டு தூண்களுக்கிடையே உள்ள தூரம் அழுத்தப்பட்ட கேபிள்கள் அரிப்பு காரணமாக வழிவிட்டதால், போக்குவரத்துக்காக மூடப்பட்டது.\\மோட்டார் வாகனங்களை மேம்படுத்துவதில் அனுமதித்தனர். ஆனால் பேருந்துகள் மற்றும் லாரிகளை தடை செய்தனர். 38 .5 கோடி மதிப்பிலான பழுது பார்க்கும் பணியை தொடங்கியது.அதில் ஒவ்வொரு இடைவெளியிலும் இரண்டு கேபிள்கள் கூடுதல் இடங்களை சேர்த்து மேம்படுத்த வலுப்படுத்த வலியுறுத்தியது.மேம்பாலத்தில் மொத்தம் 120 இடைவெளிகள் உள்ளன.சுமை சோதனையின் போது தலா 32 டன் எடையுள்ள எட்டு லாரிகள் 48 மணி நேரத்திற்கும் மேலாக மேம் பாலத்தில் இயக்கப்படும்.நாங்கள் முழு மேம்பாலத்தையும் சரி பார்க்க மாட்டோம். நிறைய நேரம் எடுக்கும். அதனால் இரண்டு இடைவேளைகளை மட்டுமே சரி பார்க்கிறோம்.சுமை சோதனைக்காக 105, 106 மற்றும் 117 , 118 தூண்களை இணைக்கும் இடைவெளிகளை
என்.எச்.ஏ.ஐ.களை கண்டறிந்துள்ளது.இந்திய அறிவியல் கழகம், சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சந்திர கிஷன், ஜே.எம்
தலைமையில் நான்கு பேர் குழுவிடம் சோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.