மேம்பாலம் இடிந்து விழுந்து இரண்டு பேர் சாவு

பாட்னா (பீஹார் ) : மார்ச். 22 – கட்டிவரும் நிலையில் இருந்த மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் 30 பேர் காயங்களடைந்துள்ள கோர சம்பவம் சுபவுல் மாவட்டத்தின் மாரீச்சா கிராமம் அருகில் நடந்துள்ளது . மேம்பால பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது . இதன் அடியில் சிக்கிய 30க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் கடும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பினும் இதுவரை வெறும் ஒன்பது பேர் காப்பாற்றப்பட்டுளளர்கள் மாரீச்சா அருகில் சேஜா -பகவூர் ஆகியவற்றிற்கு குறுக்காக கட்டப்பட்டு வந்த மேம்பாம் இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பாதுகாப்பு ஊழியர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர உள்ளூர் மக்களும் மீட்பு பணிகளுக்கு உதவி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுபாவுல் மாவட்ட ஆட்சியர் கவுசல் குமார் இது குறித்து கூறுகையில் இன்று அதிகாலை மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயங்களடைந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. என்றார். கட்டும் தருவாயில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தவிர ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன . பீகாரில் மேம்பாலங்கள் இடிந்து விழுவது சாமான்யம். கடநத ஆண்டு ஜூன் மாதத்திலும் பாகல்பூர் பகுதியில் நிறுவன நிலையில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது , பாகல்பூர் மார்க்மாக கங்கா நதிக்கு குறுக்கே ககாரியா , அகுவானி மற்றும் சுல்தான்கஞ்ச் ஆகியவ்ற்றுக்கிடையில் 1300 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுவந்தது இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததற்கு தரமற்ற பணிகளே காரணம் என தெரிய வந்தது. இதே போல் குஜராத்தின் மோர்பியாவில் 2022 அக்டோபர் மாதம் மேம்பாலம் ஒன்று திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். தவிர நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களடைந்தனர் இந்த மேம்பால மோசடி பணிகள் குறித்து இன்னமும் விசாரணைகள் நடந்து வருகிறது.