மேற்கு வங்க கலவரம் : 70 பேர் கைது

கோல்கத்தா : ஜூன். 11 – இஸ்லாம் மத இறை தூதர் முஹம்மத் பைகம்பர் குறித்த அவமதிப்பு பேச்சுக்களை கண்டித்து நடந்த எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் இறங்கிய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஹௌரா போலீசார் 70 பேரை கைது செய்துள்ளனர். இந்த வன்முறைகளின் பின்னனியில் ஹௌரா மாவட்டத்தில் ஜூன் 13 காலை 6 மணிவரை இன்டர்நெட் வசதிகள் முடக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் மத்திய படைகளை நியமிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா விடம் பி ஜே பி வற்புறுத்தியுள்ளது. பி ஜே பி எம் பி மற்றும் மேற்கு வங்காள பி ஜே பி துணை தலைவி சௌமித்ரா கான் மாநிலத்தில் மத்திய படைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வற்புறுத்தியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மதிய பிரார்த்தனைக்கு பின்னர் ஜம்மு காஷ்மீர் , டெல்லி ,உத்தரபிரதேசம் , தெலுங்கானா , ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.