மேலவைக்கு பாபுராவ் சிஞ்சனசூர் போட்டியின்றி தேர்வு

பெங்களூர்: ஆகஸ்ட். 4 – மாநில மேலவையின் ஒரு இடத்திற்கு நடக்க வேண்டியிருந்த இடை தேர்தலுக்கு வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்காத நிலையில் பி ஜே பி வேட்பாளர் பாபுராவ் சிஞ்சனசூர் ஏக மனதாக தேர்வாகியுள்ளார். இது குறித்து தேர்தல் அதிகாரி எம் கே விசாலாக்ஷி அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார். எம் இப்ராஹிமின் ராஜீனாமாவால் காலியாகியிருந்த மேலவை உறுப்பினர் பதவிக்கு இடை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 11 அன்று தேர்தல் மற்றும் அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலவை உறுப்பினர் பதவிக்கு பி ஜே பி சார்பில் பாபுராவ் சிஞ்சனசூர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேறு எந்த கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்க வில்லை. இந்த நிலையில் பி ஜே பி வேட்பாளர் பாபுராவ் சிஞ்சனசூர் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .