மேலும் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

பெங்களூர்: ஜூலை. 31 – சுமார் 545 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமன மற்றும் தெரு மோசடிகள் விவகாரத்தில் ஏஜெண்டாக செயல்பட்டுவந்த முக்கிய குற்றவாளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை மும்பையில் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
காமாட்சிபால்யா போலீஸ் பி எஸ் ஐ ஷரீப் கலிமட் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. இந்த ஊழல் குறித்து தகவல்கள் வெளிவர துவங்கிய உடனேயே தலைமறைவான பி எஸ் ஐ ஷரீப் மும்பையில் ஒளிந்து கொண்டிருந்துள்ளான்.
நகரின் போலீசார் மும்பையில் ஒளிந்திருந்த குற்றவாளியை நம்பகமான தகவல்களை வைத்து கைது செய்து நகருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர் . முதலாவது ஏ சி எம் எம் நீதிமன்றத்தில் முதல் கட்டவிசாரணைக்கு பின்னர் குற்றவாளி ஷரீப்ஐ ஆஜர் படுத்தியிருப்பதுடன் கூடுத விசாரணைக்காக போலீஸ் கட்டுக்குள் வழங்குமாறு சி ஐ டி போலீசார் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். சி ஐ டி போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் குற்றவாளி ஷரீப் கலிமட் என்பவனை பத்து நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு ஒப்படைத்து முதலாவது ஏ சி எம் எம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.