மேல்கோட்டையில் வைரமுடி திருவிழா


மண்டியா, மார்ச் 25- மேல் கோட்டையில் வைரமுடி திருவிழா பக்தி பரவசத்துடன் நேற்று துவங்கியது.
மண்டியா மாவட்டம் பாண்டவபுரம் உள்ள பிரசித்தி பெற்ற மேல்கோட்டை செல்வராஜ் சுவாமி கோவிலில் வைரமுடி திருவிழா நேற்று தொடங்கியது.
இதற்காக மண்டியா மாவட்டம் கருவூலத்திலிருந்து வைரமுடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேல்கோட்டை செல்வராய சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக கருவூலத்தில் கலெக்டர் அஸ்வதி, எஸ்பி அஸ்வின் ஆகியோர் வைரமுடி பரிசோதனை செய்தனர். பின் சம்பிரதாயப்படி கலெக்டர் வைர முடிக்கு பூஜை செய்தார். இதையடுத்து லட்சுமி ஜனார்த்தன கோவிலில் பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக மேல்கோட்டை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் வைரமுடி பூஜை செய்தனர். இரவு எட்டு முப்பது மணிக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு திருவிழா தொடங்கியது. இந்த முறை கொரோனா வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் உள்ளூரில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். இவ்வாண்டும் சம்பிரதாய முறைப்படி திருவிழா கோலாகலமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.