மேல்சபையில் பேசிஎம் மோதல்

பெங்களூர் : செப்டம்பர் . 22 – பே சி எம் போஸ்டர் விவகாரம் தொடர்பாக நள்ளிரவு காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்துள்ள விஷயம் மேலவையில் இன்று எதிரொலித்து காங்கிரஸ் மற்றும் பி ஜே பி உறுப்பினர்களுக்கிடையில் குற்றச்சாட்டுகள் –
எதிர் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஒழிக கோஷங்களை எழுப்பியதில் மொத்த அவையும் ரணகளமானது. இன்று காலை அவை துவங்கியவுடனேயே அவை தலைவர் ரகுநாத் ராவ் மல்காபுரே கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முற்ப்பட்டபோதே எதிர்கட்சி தலைவர் பி கே ஹரிப்ரசாத் எழுந்து நின்று நேற்று நள்ளிரவு காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்திருப்பதன் வாயிலாக ஒருதலை பட்சமாக அரசு நடந்துகொண்டுள்ளது . பி ஜே பி கட்சியினரும் கூட போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. காங்கிரஸ் தொண்டர்களை மட்டுமே கைது செய்து பி ஜே பி தொண்டர்களை வெறுமனே விட்டுள்ளனர். இது நியாயமா என கேள்வி எழுப்பினார்.

ஹரிப்ரஸாதின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை எழுந்து நின்று பதில் அளிக்க முற்பட்டபோதே அவருக்கு ஆதரவாக நின்ற அமைச்சர்களான கோட்டா ஸ்ரீனிவாசபூஜாரி , ஆர் அசோக் , அரக ஞானேந்திரா உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஹரிப்ரஸாதிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு பதிலடியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை மையத்திற்கு வந்து அரசுக்கு எதிராக ஒழிக கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்த்தனர் . இதனால் குற்றச்சாட்டு – எதிர் குற்றச்சாட்டு மற்றும் ஒழிக கோஷங்கள் கிளம்பி யார் என்ன பேசுகிறார் என்பதே தெரியாத குழப்பமான நிலைமை உருவானது . இந்த நேரத்தில் குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா காங்கிரசுக்கென்று தனி சட்டம் இல்லை. அனைவருக்கும் ஒரே சட்டம் என்றார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஹரிப்ரசாத் சட்டம் அனைவர்க்கும் ஒன்றே . பி ஜே பி உறுப்பினர்கள் போஸ்டர்களை ஒட்டியிருப்பினும் அவர்களை ஏன் கைது செய்யவில்லை . சட்டம் அனைவருக்கும் ஒன்று என்றால் அவர்களையும் கைது செய்யுங்கள். பாரபட்சம் ஏன் காட்டுகிறீர்கள் என வினவினார்.