மேல்சபை 7 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

பெங்களூர். மே :. 27 – அனைவரும் எதிர்பார்த்தபடியே மேலவையின் ஏழு இடங்களுக்கு ஏழு பேர் போட்டிகளின்றி தேர்வாகியிருப்பதாக தேர்தல் அதிகாரி எம் கே விசாலாக்ஷி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலவையின் எண்ணிக்கை பலத்தின் படி தேர்வாகும் நிலையில் எந்த கட்சிகளும் கூடுதல் வேட்பாளர்களை களத்தில் இறக்கவில்லை . இந்த நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வாகியுள்ளனர் . மொத்தம் உள்ள ஏழு இடங்களுக்கு நான்கு இடங்கள் பா ஜ விற்கும் , இரண்டு இடங்கள் காங்கிரஸிற்கும் , ஒரு இடம் ம ஜ தாவிற்கும் சென்றுள்ளது. பா ஜ விலிருந்து சலவாதி நாராயணசாமி , ஹேமலதா நாயக் , லக்ஷ்மன் சவுதி , மற்றும் கேசவப்ரசாத் தேர்வாகியுள்ளனர் . காங்கிரஸ் சார்பில் நாகராஜ் யாதவ் மற்றும் அப்துல் ஜப்பார் , மற்றும் ம ஜ தா சார்பில் டி ஏ சரவணா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் . இன்று வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாக இருந்ததில் இந்த ஏழு இடங்களுக்கு ஏழே பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இவர்கள் ஏழு பேரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.