மே 22 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மே 20:
அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அந்தமான், குமரிக்கடல் பகுதிகளில்ஏற்கெனவே கணித்தபடி நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மே 31-ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி தமிழகத்தில் இருந்து விலகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 20) முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி,
ாரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் லேசானது
முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை: இன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும்,
விருதுநகர்,
திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.