மைசூரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

பெங்களூர், ஜூன் 20-
நாளை சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் 75 முக்கிய நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்குப் பின் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015 ல் அறிவித்தது.
அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்த ஆண்டு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்கிறார்.
அப்போது இதற்கு முந்தைய தினங்களில் நடந்த சிறப்பம்சங்களில் தொகுப்பு வீடியோ வெளியிடப்படுகிறது.
இதேபோன்று நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
தொற்று நோய்களும், வாழ்க்கைமுறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும், இளம் வயதினரிடம் பெருகிவரும் சூழலில், யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது சிறந்த ஆரோக்கியத்திற்கும், நலனுக்கும், யோகா பயிற்சி செய்யுங்கள். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.