மைசூர் அரண்மனை எதிரே 15 ஆயிரம் பேர் யோகா

பெங்களூர்: ஜூன். 7 – அஸாதி கா அம்ருத் விழா தொடர்பாக மைசூரில் நடக்கவுள்ள சர்வ தேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்ள இருக்கும் நிலையில் மைசூர் அரண்மனை எதிரில் பதினைந்து ஆயிரம் பேர் யோகா செய்ய உள்ளனர். இது குறித்து மேற்கொண்டுள்ள தயாரிப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்ட மாநில ,முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள பதினைந்தாயிரம் யோகா பயிற்சி பெறுபவர்களை தேர்வு செய்யும் பணியை ஜூன் 13க்குள் முடிக்குமாறு மைசூரு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடவடிக்கையில் பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்திருக்கும்படி சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளேன். யோகா தின நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் , சிற்றுண்டி வசதிகள் ,குடிநீர் , மற்றும் தேவையான வசதிகளை எவ்வித சங்கடங்களுமின்றி கிடைக்கும்வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் . தவிர இவை அனைத்து குறித்து மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.