
பெங்களூர் /மைசூர் : அக்டோபர் .24
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா இன்று கோலாகலமாக நடந்தது பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மாநில திருவிழாவாக கருதப்படும் நாட ஹப்பா மைசூர் தசரா கண்களை கொள்ளை கொள்ளும் உலக பிரசித்திபெற்ற ஜம்பூ சவாரி இன்று பிற்பகல் தொடங்கியது. விஜயதசமி தினமான இன்று மாநில தேவதை சாமுண்டேஸ்வரி அம்மையை தங்க அம்பாரியில் அமரவைத்து யானை படைகள் மைசூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வரவுள்ள நிலையில் இந்த கண் கொள்ளா காட்சியை காண லட்சக்கணக்கில் அண்டைமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பொதுமக்கள் திரண்டுள்ளனர். தவிர இந்த ஊர்வலத்தின் துவக்கத்தின்போது பல்லாயிர மக்கள் சாமுண்டேஸ்வரி அம்மனை வழிபட்டனர். மைசூரின் அரண்மனை எதிரில் இன்று மதியம் 2.20 மணியளவில் சுப மீன லக்கினத்தில் நந்தி ஸ்தூபத்திற்கு பூஜை அளித்ததன் வாயிலாக மாநில முதல்வர் சித்தராமையா தசரா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தங்க அம்பாரியில் மாநில தேவதையாயாக கருதப்படும் சாமுண்டேஸ்வரி தாயார் உருவத்தை சுமந்தபடி யானை படை தலைவன் அபிமன்யுவுடன் 8க்கும் அதிகமான யானைகள் ராஜ கம்பீரத்துடன் நடைபோட்டு ஊர்வலத்தில் பங்கு கொண்டன. தவிர 49 வித விளம்பர ஊர்திகள் , மற்றும் 50க்கும் மேற்பட்ட நடன மற்றும் கலாசார குழுக்களின் நடனங்கள் , ஆகியவையும் இன்றைய ஜம்பூ சவாரியில் இடம்பெற்றிருந்தன. இன்றைய கோலாகல நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சித்தராமையா , துணை முதல்வர் டி கே சிவகுமார் , மைசூர் இளைய மன்னர் யதுவீர உடையார் , உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் அம்பாரியில் வீற்றிருந்து தாய் சாமுண்டேஸ்வரிக்கு மலரஞ்சலி செலுத்தி தங்கள் மரியாதையை செலுத்தினர். தவிர மாநில மக்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்தனர். இன்று மாலை 4.40 மணியளவில் சுப மீன லக்கினத்தில் யானை தலைவன் அபிமன்யு தலைமையில் சாமுண்டேஸ்வரியை சுமந்து மற்ற 8 யானைகளுடன் சுமார் 5 கிலோ மீட்டர் ராஜ பாதையில் இந்த ஜம்பூ சவாரி ஊர்வலம் நடந்து வருகிறது. பன்னிமண்டபத்தில் இந்த ஊர்வலம் நிறைவு பெற இருப்பதுடன் இதன் வாயிலாக கடந்த 10 நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்ற மைசூர் தசரா நிறைவுக்கு வருகிறது. மாநில தேவதை சாமுண்டேஸ்வரியை இன்று காலை சாமுண்டி மலையிலிருந்து ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டது. மலையிலிருந்து ஊர்வலமாக வந்த சாமுண்டேஸ்வரியை சாலையின் சாலையின் இரு மடங்கிலிருந்தும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்த தரிசனம் செய்தனர்.