மைசூர் பாரம்பரிய சாரட் குதிரை வண்டி கலாச்சாரம் மீட்டெடுக்க திட்டம்

மைசூர், மார்ச் 14-
மைசூர் பாரம்பரியத்தில் சாரட்’குதிரை வண்டி’ கலாச்சாரத்தை மீட்டெடுத்து அதை தற்கால இளைய தலைமுறை பார்த்து மகிழ புதிய பாதைகள் மற்றம் நிலையங்கள் உருவாக்க 22. 12 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் தர்ஷன் திட்டத்தின் கீழ் மாநில அரசுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பான திட்ட அறிக்கையை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, டெண்டர் பணிகள் நடைபெற்று விரைவில் பணிகள் தொடங்கும் என மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் கே. வி .ராஜேந்திரா அகலாதி தெரிவித்துள்ளார்..தற்போது 40 டோங்காக்களும், 25 சாரட்டுக்களும் நகரத்தில் செயல்பட்டு டோங்கா பாரம்பரியத்தை சுமந்து வருகின்றன.1. 64 கோடி ரூபாய் திட்டத்தில், இந்த கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து சுற்றுலாவுக்கு இத்துறையை பயன்படுத்த வேண்டும்.
இச் செலவில் 3 டோங்காக்கள் நிலையம், 1.60 கோடி ரூபாய் செலவில் இரண்டு தொழுவங்கள், 18 லட்சம் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்பம், பின்பற்றப்படுகிறது.
உலக அளவில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரமாக மைசூரை மாற்ற இந்த திட்டம் ஏற்படுத்தப்படும்.
அதற்காக இரவு நேர போக்குவரத்திற்கான கருப்பொருள் டோங்கா சுற்றுகள் கட்டப்பட்டு வருகின்றன.இங்கு ஏ.டி.எம்., சுற்றுலா தகவல் மையம் போன்ற உள்கட்டமைப்பு இந்த வழித்தடத்தில் ஏற்படுத்தப்படும்.
இந்த பாதையை முழுவதும் சுற்றுலா பயணிகள் நட்பு மற்றும் பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படுகிறது. மைசூர் பாரம்பரிய மீட்க பாரம்பரிய அனுபவம் மண்டலம் உருவாக்கப்படும். அங்கு சுற்றுலா பயணம் டோங்கா வண்டிகள்
மூலம் பாரம்பரியத்தில் தளங்களை பார்வையிட அனுமதிக்கப்படும்.
சுற்றுலா பயணிகளுக்கு நகரத்தின் வரலாற்றை அறிமுகப்படுத்த டோங்கா ஓட்டுபவர்கள் உருவாக்கப்படுவார்கள்.
இதனால் நிலையான சுற்றுலா செயல்படுத்தப்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி அமைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மைசூரில் ஸ்ரீ சாம்ராஜேந்திர மிருகக் காட்சி சாலைக்கு ஆண்டு தோறும் 30 லட்சம் பேர் வருகை தருகிறார்கள்.
கரஞ்சிகெரே ஒட்டிய இடங்கள் ஒன்றரை லட்சமும் சுற்றுலா பயணிகள் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்திற்கு 30 ஆயிரம் பேரும் வருகை தருகின்றனர்.
இதனால் இந்த மூன்று மையங்களையும் இணைக்கும் வகையில் ‘எக்கோ எக்ஸ்பீரியன்ஸ் சோன்’ உருவாக்கப்படுகிறது.
அதற்காக 1. 83 கோடி ரூபா நுழைவுத் திடல் , சுற்றுச்சூழல் கோபுரம், பாலம், ஏரி நடை பயிற்சி மையம், கேனாவா வாக், புட் ப்ளாசா, கார்களுக்கு ஜிப்லைன், கயிறு பாலம் கட்டப்படும் என தெரிவித்துள்ளனர்.