மொபைலில் அழைத்து ஆடைகளை அகற்ற கூறியதாக பிரஜ்வல் மீது பெண் புகார்

பெங்களூரு, ஜூன் 26:
முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்காவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக‌ புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிஐடி சைபர் கிரைம் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நான்காவது வழக்கு. இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பிரீதம் கவுடா பெயரும் சிக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை புரிந்தப்போது, மகனின் பள்ளியில் மொபைல் போன் எண்ணை பெற்ற பிரஜ்வல், எனக்கு தினமும் வீடியோ கால் செய்து பேசி வந்தார்.
வீடியோ கால் செய்து என்னை வற்புறுத்தி ஆடைகளை அகற்றக் கூறி, என்னைப் பார்த்து சுயஇன்பம் பெற்றார். ஆடைகளை அகற்ற சம்மதிக்காதபோது வீடியோவை சேமித்து வைரலாக்குவேன் என்று மிரட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது திடீரென இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பிரஜ்வாலை தொடர்பு கொண்டேன். அவர் மழுப்பாலன பதில் கூறினார். இரண்டாவது முறை புகைப்படம் வைரலானதால், பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க முன் வந்துள்ளார்.
கிரண், ஷரத் மற்றும் ப்ரீதம் கவுடா சில வைரலான புகைப்படங்களை வைரலாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், 4 பேர் மீதும் பெண் புகார் அளிக்க முன்வந்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ஜாமீன் விண்ணப்பம்: ஹொளேநரசிப்புரா நகர நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தும் பிரஜ்வல் விடுவிக்கப்படவில்லை. எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகிய இருவரும் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில், 82வது மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்றத்தில் எச்.டி.ரேவண்ணா ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளார். முதலில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பின்னர் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன.