மொரார்ஜி தேசாய் பள்ளிமாணவர் காணவில்லை

மாண்டியா, செப்.12- மாண்டியா மாவட்டத்தில் உள்ள தங்கலகெரே கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் குடியிருப்புப் பள்ளியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சென்ற தந்தை, விநாயகர் திருவிழாவையொட்டி, மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்தபோது, ​​மாணவர் காணாமல் போனது தெரிய வந்தது.
பள்ளி நிர்வாகத்தின் மீது, பெற்றோர் கடும் கோபம் தெரிவித்துள்ளனர்.கடந்த 20 நாட்களுக்கு முன், 9ம் வகுப்பு படித்து வந்த மகன் கிஷோரை, பள்ளிக்கு விட்டு சென்றார். பின்னர் கணபதி பண்டிகை மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சென்றபோது, ​​சுமார் 15 நாட்களாக உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறியது. அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்று பொறுப்பற்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், சிறுவன் பள்ளிக்கு வரும் காட்சி மட்டும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெளியே செல்லும் காட்சிகள் இல்லை. இதனால் சிறுவன் காணாமல் போனது பெற்றோர்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 நாட்களாக சிறுவன் பள்ளிக்கு வரவில்லை என்றாலும், இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் விசாரிக்கவில்லை என தெரிகிறது. இதனால், பெற்றோர் தங்கள் மகனைக் கண்டுபிடிக்கக் கோரி கதறி அழுதனர்.
மாண்டியா மாவட்ட நிர்வாகம், காணாமல் போன வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு பள்ளி நிர்வாகக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.
மேலும், மாணவணின் அறையில் சிறுவன் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது.அதில், ‘எனக்கு இந்த பள்ளியில் படிக்க விருப்பமில்லை. தயவு செய்து என்னைக் கண்டுபிடிக்காதே அப்பா என்று எழுதியுள்ளார்.ஆனால் இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து எனது மகனுடையது அல்ல என்று பெற்றோர்கள் கூறினர்.