மொழி திறன் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் ஆர்வம்

பெங்களூரு, டிச. 5: தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மொழி திறன், மாறுவேடம், சைகை பாடல் போட்டிகளில் பெருமளவில் பங்கேற்றனர். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு தமிழ்த் புத்தகத் திருவிழா பெங்களூரு டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியர்ஸ் டிச. 1 ஆஅம் தேதி தொடங்கி டிச. 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.விழாவின் நான்காவது நாளான திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் கலந்து கொண்ட மொழி திறன், மாறுவேடம் மற்றும் சைகை பாடல் போட்டிகள் நடந்தது. புலவர் கார்த்தியாயினி மேற்பார்வையில் நடந்த போட்டியை புலவர் பொன். க. சுப்பிரமணியன் மற்றும் கோ. கருணாநிதி ஆகியோர் நடுவராக இருந்தனர்.
போட்டியில் பெங்களூரில் இயங்கி வரும் ஆர் பிஏஎன்எம்எஸ், அல்போன்சா, எஸ்விசிகே, அன்னாசாமி, ஐடிஐ மந்தீர், எம்.எஸ்.நகரில் இயங்கி வரும் அரசு தமிழ் பள்ளிகளில் படிக்கும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மொழி திறன் ஒப்புவித்தல் போட்டியில் ஒன்றாம் வகுப்புக்கான போட்டியில் முதல் பரிசு ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி மாணவி ரம்யா, 2வது பரிசு ஐடிஐ மந்தீர் பள்ளி மாணவி நந்தனா, 3வது பரிசு ஆர் பிஏஎன்எம்எஸ் பள்ளி மாணவி சுஷ்மிதா ஆகியோர் பெற்றனர்.
இரண்டாம் வகுப்புக்கான போட்டியில் முதல் பரிசு எம். எஸ்.நகர் அரசு தமிழ் பள்ளி மாணவி சோனியா, 2வது பரிசு ஐடிஐ மந்தீர் பள்ளி மாணவி நான்சி ஏவாஞ்சலின், 3வது பரிசு அல்போன்சா பள்ளி மாணவி சஹானா பெற்றனர். மூன்றாம் வகுப்புக்கான போட்டியில் முதல் பரிசு எஸ்விசிகே பள்ளி மாணவி அனிதா, 2வது பரிசு அன்னா சாமி பள்ளி மாணவர் விஷ்ணு, 3வது பரிசு ஐடிஐ மந்தீர் பள்ளி மாணவி லக்னேஷ்சி பெற்றனர். நான்காம் வகுப்புக்கான போட்டியில் முதல் பரிசு ஐடிஐ மந்தீர் பள்ளி மாணவி காவியா, 2வது பரிசு ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி மாணவி பாரதி, 3வது பரிசு ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி மாணவர் சரவணன் ஆகியோர் பெற்றனர். மாறுவேடம் வேட போட்டியில் பாரதியார், ஒளவையார், வள்ளலார், கம்பர், காரைக்கால் அம்மையார் ஆகிய வேடம் அணிந்து அவர்கள் பாடிய பாடல்களை மாணவர்கள் பாடியது, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் முதல் பரிசு ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி மாணவி பாரதி, 2வது பரிசு எஸ்விசிகே பள்ளி மாணவர் அஜய், 3வது பரிசு எஸ்விசிகே பள்ளி மாணவர் முகுந்தன் ஆகியோர் பெற்றனர்.
சைகை பாடல் போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு எஸ்விசிகே பள்ளி மாணவி அகதி, 2வது பரிசு ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி மாணவி ரேகா சீ, 3வது பரிசு அல்போன்சா பள்ளி மாணவர் சுதீப் ஆகியோர் பெற்றனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி கவுரிக்கப்பட்டனர்.