மோடியின் வருகையால் எழுச்சி

சேலம்: ஜன.4-
பிரதமர் வருகையில் தமிழக பாஜகவினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக அலுவலகத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திறந்துவைத்தார். மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், சேலம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு, மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பிரதமர்வருகையால் தமிழக பாஜகவினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தை தேசிய அளவில் தரம் உயர்த்தியவர் துணைவேந்தர் ஜெகநாதன். அவர் உள்பட 4 பேராசிரியர்கள் சேர்ந்து, தனியார் நிறுவனத்திடம் இருந்து வரும் பணத்தை, அறக்கட்டளை மூலமாக மாணவர்களின் திறமையை வளர்க்கும் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பல்கலை.களில் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளன. இதில் எந்த தவறும் இல்லை. துணைவேந்தர் மீது முகாந்திரமின்றி வன்கொடுமைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.