மோடியை நாடு ஒருபோதும் மன்னிக்காது- ராகுல்

டெல்லி: ஏப். 24: பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், * பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இவ்வளவு பணத்தில் 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தந்தால், அவர்களின் குடும்ப வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.

  • 10 கோடி விவசாய குடும்பங்களின் கடனை தள்ளுபடி செய்திருந்தால் எண்ணற்ற தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.
  • இவ்வளவு பணத்தில் 20 ஆண்டுகளுக்கு 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர்களை வழங்கியிருக்கலாம்.
  • இவ்வளவு பணத்தில் இந்திய ராணுவத்தின் முழுச் செலவையும் 3 ஆண்டுகள் தாங்கியிருக்கலாம்.
  • மோடி தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடியில், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம்.
  • ‘இந்தியர்களின்’ வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பணம், ‘அதானிகளுக்கு’ பரபரப்பு ஏற்படுத்துவதற்காகச் செலவிடப்பட்டது.
  • பிரதமர் நரேந்திர மோடியின் இந்தக் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது.
  • தற்போது உள்ள நிலைமை மாறி, ஒவ்வொரு இந்தியரின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.